day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் : ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி

யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் : ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி

பினோனி: 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி நேற்று ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 219 ரன்கள்குவித்தது. தொடக்க வீராங்கனைகளான கேப்டன் ஷபாலி வர்மா 34 பந்துகளில், 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 78 ரன்களும் சுவேதா ஷெராவத் 49 பந்தில், 10 பவுண்டரிகளுடன் 74 ரன்களும் விளாசினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவர்களில் 111 ரன்கள்விளாசி மிரளச் செய்தது. ரிச்சா கோஷ் 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 49 ரன்களும் கோங்கடி த்ரிஷா 11 ரன்களும் சேர்த்தனர். 220 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 97 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ‘டி’ பிரிவில் 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!