1984 ஆம் ஆண்டு, இதே நாளில் அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி, அவரது சொந்தப் பாதுகாவலர்கள் இருவரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று அவரின் நினைவு தினத்தையொட்டி, சக்தி ஸ்தலில் உள்ள அவரது சமாதியில் காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் திருமதி.சோனியா காந்தி மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.