நீலகிரி : சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. கோடை விடுமுறையை கொண்டாடவும், கோடை வெயிலின் தாக்கம் எதிரொலியாகவும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகிறார்கள். இந்தநிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி வருகிற 19-ந் தேதி முதல் தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில், கோடை சீசனையொட்டி (நள்ளிரவு 12 மணி) முதல் மே மாதம் இறுதிவரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குன்னூர்-பரலியார் சாலை, கோத்தகிரி சலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் உதகை நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உதகை-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை, உதகை – கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதகவும் தெரிவித்துள்ளனர்.