தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடைக்கானல்-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி-திருச்சி-கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி-கிருஷ்ணகிரி-தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் உள்பட 20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வடைந்துள்ளது. ரூ.20 முதல் ரூ.50 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், சுங்கச்சாவடி பயன்பாட்டாளர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.