சூரிய கிரகணம் இன்று உலகம் முழுவதும் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணத்தை ரஷ்யா, கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளிலும் காணலாம். உலக அளவில் இந்திய நேரப்படி 2.19 மணிக்குத் தொடங்கி 6.32 வரையிலும், இந்தியாவில் அதிகபட்சமாக மும்பையில் மாலை 4.49க்கு தொடங்கி 6.09 வரையிலும்,சென்னையில் 5.13 மணிக்கு தொடங்கி 5.44 மணி வரையிலும் சூரிய கிரகணம் நடக்க இருக்கிறது. இந்த சூர்ய கிரகணத்தின் போது ரஷ்யாவில் அதிகப்பட்சமாக 80 விழுக்காடும், இந்தியாவில் 8 விழுக்காடும் சூரியனை சந்திரன் மறைக்கும். இதனையொட்டி, இந்து வழிப்பாட்டு தலங்கள் மூடப்படவுள்ளன. இந்த நிலையில், சூரிய கிரகணத்தை காண்பதற்கு, கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பொதுமக்கள் நேரடியாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியாது, சூரிய கிரகணத்தால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது என்பது இயற்பியலாளர்கள் கருத்து.