இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், இன்று (ஜூலை மாதம் 30ஆம் தேதி) நாடு முழுவதும் புதிதாக மேலும் 20 ஆயிரத்து 408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று 20 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 20 ஆயிரத்து 577 பேருக்கும் கடந்த புதன்கிழமை 18 ஆயிரத்து 313 பேருக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை 14 ஆயிரத்து 830 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் புதிதாக அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இரு நாட்களாக குறைந்து வந்த கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. இத்துடன் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 138ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 43 ஆயிரத்து 384ஆக உள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதித்தவர்களில் புதிதாக 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 312ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து நேற்று 20 ஆயிரத்து 958 போ் குணமடைந்துள்ளனா். கொரோனாவில் இருந்து குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாளுக்கு நாள் சிகிச்சைப்பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 30 ஆயிரத்து 442-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,03,94,33,480 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமையான நேற்று மட்டும் 33,87,173 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.