இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14,917 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,42,68,381 ஆக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,17,508 ஆக உள்ளது. கொரோனாவால் நேற்று ஒரேநாளில் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 5,27,069 ஆக உயா்ந்துள்ளது. 14,238 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து 4,36,23,804 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கடந்த சில நாட்களாக தினந்தோறும் சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு சற்று குறையத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.