12ஆம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் அரசு கலைக் கல்லூரிகளில் சேர ஜூன் 22 -ம் தேதி விண்ணப்பங்கள் ஆன்லைனில் கிடைக்கத் தொடங்கின. www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 7ஆம் தேதி) கடைசி நாள் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல, B.E., B.Tech., படிப்புகளில் சேர கடந்த 21 தேதி முதல் விண்ணப்பங்கள் https://tneaonline.org/ என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன. இதற்கு ஜூலை மாதம் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநகரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.