12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் அரசு கலை-அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 4 லட்சத்து 2 ஆயிரத்து 801 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்துடன், பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 2,07,361 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 29ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், NATA தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை B.Arch மாணவர்கள் மட்டும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.