தமிழ் திரைப்பட நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் இன்று 70ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள விஜயகாந்தின் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல் நலக்குறைவு காரணமாக பொதுவெளியில் வருவதை தவிர்த்து வரும் விஜயகாந்த் இன்று தொண்டர்களை சந்தித்து கையசைத்து தொண்டர்களின் வாழ்த்துக்கு இரு கைக்கூப்பி நன்றி தெரிவித்தார். மேலும், விஜயகாந்த்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட தமிழகத்தின் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.