தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒப்பற்ற மக்கள் தொண்டரும், மக்கள் அரசியல்வாதி என்றும் அழைக்கப்படும் கர்ம வீரர், பெருந்தலைவர் காமராஜருக்கு இன்று 120ஆவது பிறந்தநாள். ஏழைகளின் கல்விக்கு உணவு ஒரு தடையாக இருந்துவிடக்கூடது என்பதற்காக இலவச மதிய உணவு திட்டத்தை முதன்முதலில் தமிழகத்தில் கொண்டுவந்தவர். பிறந்ததினத்தை கொண்டாடும் வகையில் இன்று இவரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு முதல்முறை முதலமைச்சராக பதவியேற்ற 1957 மற்றும் 1962 என்ற மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். கல்வி, தொழில்துறை, மருத்துவம், மின்சாரம், சாலை போக்குவரத்து, கிராம பஞ்சாயத்து ராஜ் என பல்வேறு துறை மூலம் தமிழகத்தில் பொற்காலமாக இவரின் ஆட்சி காலத்தை கட்டமைத்த இவர் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத மேதை. பதவியை விட மக்கள் பணியையும் கட்சிப்பணியையுமே இருகண்களாக கொண்ட காமராஜரின் பிறந்தநாளில் அவரின் நினைவுகளை போற்றுவோம்.