தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்ய தொடங்கியுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.