தங்கத்தின் விலை பல்வேறு காரணங்களால் ஏற்ற இறக்கங்களுடனே இருந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில், பின்னர் கடந்த 10 நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களுடனே இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,680க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ரூ.4,835க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 அதிகரித்து ரூ.67,500க்கும், ஒரு கிராம் 50 காசுகள் அதிகரித்து ரூ.67.50 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.