இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் புதிதாக மேலும் 16,464 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,40,19,811ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,43,989 ஆக உள்ளது. மேலும் 24 போ் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,26,396ஆக உயா்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 16,112 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,33,65,890 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணிநேரத்தில் 8,34,167 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 204.34 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.