இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,591 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 84,931 ஆக உள்ள நிலையில், 45 பேர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை மொத்தம் 5,27,779 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 9,206 போ் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் இதுவரை 4,38,02,993 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா் என மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பில் தெரிவித்துள்ளது.