இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 4,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை பாதிப்பு 4,45,04,949ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 46,347 ஆக உள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 20 போ் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 5,28,185 ஆக உயா்ந்துள்ளது.