இந்தியா முழுவதும் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 5,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 65,732 ஆகக் குறைந்துள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.44 கோடியாக இருக்கும் நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.38 கோடியாக உள்ளது.