இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 19,893 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,40,87,037-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,36,478 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்களில் புதிதாக 53 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,26,530 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 20,419 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,34,24,029-ஆக அதிகரித்துள்ளது.