இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,379 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வந்த 16 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் பலியாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 7,094 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் கொரோனாவால் பாதித்து இதுவரை மொத்தம் 4,38,93,590 பேர் குணமடைந்துள்ளனர். இன்று காலை 8 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 50,594 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.