இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை சனிக்கிழமையான இன்று (ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி) மத்திய சுகாதாரத் துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், புதிதாக மேலும், 19,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,34,793 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,26,649 ஆக உயர்ந்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 19,928 போ் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,34,65,552ஆக அதிகரித்துள்ளது.