காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னயங்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட மின்மாற்றியில் நேற்று பிற்பகலில் லேசான பழுது ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக மின் மாற்றியில் தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்ட பொதுமக்கள் மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் யாரும் இந்த சம்பவத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் நள்ளிரவில் மின்மாற்றி வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால், அருகில் இருந்த குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடியுள்ளனர். உடனே காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, 5 தீயணைப்புதுறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மின்சாரத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இந்த விபத்திற்கான காரணம் என அந்த பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.