தீபாவளி பண்டிகை இந்தாண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், அதற்காக அக்டோபர் 21ஆம் தேதி வெளியூர் செல்லும் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு அரசுப் பேருந்துகளில் இன்று காலை tnstc.in என்ற இணையதளம் மூலம் தொடங்கியது. இதையடுத்து, தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது. எனவே, அனைத்து வழித்தடங்களில் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கும் அதிகபட்ச பேருந்து கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அந்த கட்டண விவரங்கள் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதனை ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இனி வரும் பண்டிகை காலங்களிலும் இந்த கட்டணங்களுக்கு மிகாமல் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் வசூலிக்க எடுத்துரைக்கப்பட்டுள்ளது.