நடிகை சாய்பல்லவி, பாகுபலி படப்புகழ் ராணா டகுபதி இணைந்து நடித்திருக்கும் தெலுங்கு திரைப்படம் ’விரத பர்வம்’. இந்தப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குநர் வேணு உடுகுலா இயக்கியுள்ளார். நாளை மறுநாள் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் சாய் பல்லவி அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது ஹோம்லி லுக்குக்கானா காரணத்தை எடுத்துக்கூறியுள்ளார்.
அதில், ”நானும் எனது தங்கையும் பேட்மிண்டன் விளையாடும் போதெல்லாம் எங்களுக்கு விருப்பமான ஆடைகளையே அணிவோம். ஆனால், சினிமாவுக்கு வந்த பிறகுதான் ஸ்கின்னி ஆடைகளை அணிய வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன். அதற்கு காரணம், பிரேமம் திரைப்படத்தில் என்னுடைய டேங்கோ நடன வீடியோ வைரலானபோது நெட்டிசன்கள் கொடுத்த கமெண்ட்ஸ் தான். அவை என்னை மிகவும் வேதனையடைய செய்தது. அதற்கு பிறகே திரைப்படங்களில் ஹோம்லி லுக் மட்டுமே பின்பற்ற முடிவு செய்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.