திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு உறுதியளித்த படி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தரவேண்டும், அரசு துறைகளில் ஆள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஏழு முனை வேன் பிரச்சார பயணம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களை சந்தித்து ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கையாக இந்த பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ள அரசு ஊழியர் சங்கத்தினர் அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய அளவில் தங்களது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.