திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் உள்ளது. இங்கு, சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ். கலந்துரையாடினார் . அப்போது, மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று வரும் முதியவர்களிடம், அவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அவருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், இணை இயக்குனர் ஊரக நலப்பணிகள் மாரிமுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவன தலைவர் ரமேஷ் மற்றும் பலர் இருந்தனர்.