திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் ரயில்வே காவலர்கள் பிளாட்பாரங்களில் ரயில்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் பிளாட்பாரம் 5-ல் வந்து நின்றது. அதில், பயணிகளை சோதனை மேற்கொண்டபோது, முன்பதிவு செய்யப்பட்ட எஸ்7 கோச்சில் சந்தேகிக்கும்படி இருந்த மூன்று இளைஞர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதில் சந்தேகம் வலுப்பெறவே வாலிபர்களிடம் சோதனை செய்ததில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 12 லிட்டர் கொள்ளளவு உள்ள வெளிமாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்து மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர்.
இதைவிட ஒரு தங்கைக்கு அண்ணன் என்ன பரிசுகொடுத்துவிட முடியும்!