திருப்பத்தூர் மாவட்டம் , ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சமியுல்லா இவர் மற்றும் இவரது நண்பர் நவாஸ் ஆகியோர் சென்னை சென்று ஆம்பூர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கொமேஸ்வரம் என்ற இடத்தில் கார் பழுதாகி நின்றது. பின்னர், அங்கிருந்து சுமார் 1கிலோ மீட்டர் தூரம் காரை இருவரும் தள்ளிக்கொண்டு வந்தனர். அப்போது, கன்னிகாபுரம் என்ற இடத்தில் காரின் முன்பக்கம் புகை வந்துள்ளது. பின்னர் திடீரென கார் தீப்பற்றியதால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் கார் முழுவதும் தீ பரவியது. இதுகுறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது