திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் இருக்கும் பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் பகுதியில் வாணியம்பாடியில் இருந்து பேர்ணாம்பேட்டை நோக்கி தண்ணீர் கேன் ஏற்றிச்சென்றுக் கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மங்களூரில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி சென்ற லாரி மோதியதில், தண்ணீர் கேன் லாரி சாலையின் தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தண்ணீர் கேன் லாரியின் கிளீனர் ஹரி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.