தலைநகர் டெல்லியில் இன்று மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவரும் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இதன்மூலம், குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னதாக கேரள மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் இருந்த குரங்கு அம்மை, தற்போது டெல்லியிலும் மூன்று பேருக்கு பரவியுள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.