திருவள்ளூர் மாவட்டம் தண்டலச்சேரி பகுதியில் நேற்று இரவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அங்கு பூட்டிக் கிடந்த டாஸ்மாக் கடைக்குள் இருந்து வெளியேறிய சத்தத்தை கேட்டு சந்தேகம் அடைந்து காவலர்கள், மதுபான கடையின் பின்புறம் சென்று பார்த்துள்ளனர். அப்போது, இரண்டு பேர் கடையின் சுவற்றில் துளையிட்டு டாஸ்மாக் உள்ளே நுழைந்து அங்கிருந்த உயர் ரக மதுபானத்தை குடித்துள்ளதையும், அதனால் போதை தலைக்கேறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதை கண்டுள்ளனர். பின்னர், கொள்ளையடிக்க வந்த இருவரும் குடித்துவிட்டு கடைக்குள் ரகளையில் ஈடுப்பட்டு வருவை உணர்ந்த காவல் துறையினர், அவர்களிடம் நாசுக்காக பேசி கடையின் பின் புறம் அவர்கள் போட்ட துளை வழியாகவே வெளியே வர வைத்துள்ளனர். இருவரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இவர்கள் சிறுபுழல்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், முனியன் என்பது தெரிய வந்ததுள்ளது. இவர்கள் மீது கவரப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையடிக்க சென்ற டாஸ்மார்க் கடையிலேயே குடித்துவிட்டு கொள்ளையர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல்துறையில் மாட்டிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.