புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் 29 வரை 17 அமர்வுகளாக நடைபெறும்.இதில் ,பல் மருத்துவ ஆணைய மசோதா, வன பாதுகாப்பு மசோதா, கடலோர மீன் வளர்ப்பு ஆணைய திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்ட குடியரசுத் துணைதலைவர் ஜகதீப் தன்கர் தலைமையில் முதன்முறையாக மாநிலங்களவை கூடியிருப்பதற்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நாடு 75-வது சுதந்திர தினம் கொண்டாடும்போதும், ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்கும்போதும் இந்த கூட்டத்தொடர் தொடங்கியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். பின்பு கூட்டத்தொடரை அவைத் தலைவர் ஓம் பிர்லா அவர்கள் தொடங்கி வைத்தார். விலை உயர்வு, பணவீக்கம், நலிவடைந்தவர்களுக்கான இடஒதுக்கீடு, இந்திய – சீன எல்லை பிரச்சனை உள்ளிட்டவைகளை மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் கேட்ட திட்டமிட்டுள்ளனர்.