டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த வரலாறு காணாத வீழ்ச்சிக்கு அமெரிக்க நாணயத்தின் மதிப்பு, முதலீட்டாளா்கள் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் வீழ்ச்சியடைந்து 82.69 ஆக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தகத்தின் இறுதி நாளான கடந்த வெள்ளிக்கிழமை 82.19ல் தொடங்கிய அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக 82.43 வரை கீழிறங்கி 82.32-இல் நிலைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.