இந்தியாவில், மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் குறைந்து 59,186 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 65 புள்ளிகள் குறைந்து 17,653 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து இன்றைய வர்த்தகத்தின் ஆரம்பத்தில், 80.46 ஆக குறைந்தது. முன்எப்போதும் இல்லாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததுக்கு பெடரல் ரிசர்வ் அமைப்பு தனது வட்டி விகித உயர்வை அறிவித்ததே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.