சென்னை : தமிழக சட்டசபை 3 நாள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் , பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பேசுகிறார்கள். இறுதியாக, தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகள் வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.