பொதுவாக ஒரு மாநிலத்தில் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தாலோ அல்லது ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தாலோ எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கோரிக்கை விடுப்பார்கள். ஆனால், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு குறித்து டெல்லி சட்டமன்றத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தனக்கு தானே நம்பிக்கை தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடத்துகிறது.