சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 740-க்கும், ஒருசவரன் ரூ.37 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டநிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.544 குறைந்து, ரூ.37 ஆயிரத்து 376 க்கும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 672க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு ரூ. ஆயிரத்து 64 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.