கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 74 வயதான மாற்றுத் திறனாளி எழுத்தாளர் ஒருவர் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் அளிக்கக் கோரி குற்றஞ்சாட்டப்பட்ட எழுத்தாளர், கோழிக்கோடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, செஷன்ஸ் நீதிபதி குற்றஞ்சாட்டிய பெண் பாலியல் இச்சையை துாண்டும் விதமாக ஆடை அணிந்திருந்ததால், சட்டப்பிரிவு 354ஏ குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருந்தாது என கூறி முன் ஜாமின் வழங்கியுள்ளார். நீதிபதியின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.