அயர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் ஜூனியர் ஹாக்கி லீக் போட்டியில் இந்தியா உள்பட அயர்லாந்து, அமெரிக்கா, நெதர்லாந்து, உக்ரைன் ஆகிய ஐந்து நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும் இந்த போட்டியின், இறுதிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் ஜூன் 26ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் மோதும். இந்த போட்டியில், முதல் ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்து அணியை வீழ்த்தியது. பின்னர், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-2 என்ற கணக்கில் போட்டியை டிரா செய்தது. இதைத்தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்தில் நேற்று உக்ரைன் அணியை எதிர்க்கொண்ட இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.