ஜார்கண்ட் மாநில முதலமைச்சரும் ஹேமந்த் சோரனின் நெருங்கியவரும், உதவியாளருமான பிரேம் பிரகாஷின் வீட்டில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 24ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பீரோவில் இருந்த இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் 60 தோட்டாக்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, துப்பாக்கிகள் ராஞ்சியைச் சேர்ந்த 2 காவலர்களுக்கு பாதுகாப்பு பணியின் போது வழங்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பணி முடிந்து வீடு திரும்பும்போது பிரேம் பிரகாஷின் வீட்டில் துப்பாக்கிக்களை காவலர்கள் வைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து பணியின்போது கவனக்குறைவாக இருந்த காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.