சென்னை: கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்கி ஜுன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு அமலில் இருக்கும்.
அதுவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் நங்கூரமிடப்பட்டு இருக்கும். எந்த விசைப் படகுகளும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது என்று தெரிவித்துள்ளனர்.