சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான இமாசல பிரதேச மாநிலம், கின்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 106. முன்னதாக, கடந்த 2ஆம் தேதி அவருக்கு தேர்தல் ஆணைய குழுவினர் சிவப்பு கம்பளம் மரியாதை செலுத்தி தபால் வாக்கு பதிவு நடத்தினர். இந்த நிலையில், அவரது மறைவுக்கு இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் இரங்கல் தெரிவித்து உள்ளார். இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12ஆம் தேதி தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.