காரைக்கால் நேருநகரைச் சேர்ந்த 13 வயது மாணவன் அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில், வகுப்பில் உடன் படிக்கும் மாணவர்களில் முதல் மாணவனாக வந்துள்ளார். இதனால், அதே பள்ளியில் படிக்கும் சகமாணவியின் தாயார், மாணவனுக்கு விஷம் கலந்த பானத்தைக்கொடுத்துள்ளார். இதையடுத்து, மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, மாணவன் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் விஷம் கொடுத்த மாணவியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில், மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணின் வீட்டை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுத்தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.