சென்னை பல்லாவரம் அருகே பம்மலைச் சேர்ந்த ஞானசெல்வன் என்பவர் மனைவி வகிதா மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். பிரிண்டிங் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஞானசெல்வன், தினமும் இரவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் கட்டி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சம்பள பணத்தை ரம்மியில் இழந்துள்ளார். இதுத்தொடர்பாக, கணவனிடம் சண்டையிட்டு வந்த வகிதா, நேற்றும் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கணவனிடம் சண்டையிட்டுவிட்டு, பின் வீட்டின் அறையில் தாழிட்டுக்கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாடுவதை எவ்வளவு எடுத்துச்சொல்லியும் கணவர் நிறுத்தாததால், மனமுடைந்து மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது. தற்கொலை குறித்த எண்ணங்கள் எழுந்தால் 104 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புக்கொண்டு நிபுணர்களின் ஆலோசனைகளை பெறலாம்.