ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கமான அலெக்சாண்டர் டுகின் புதினின் மூலை என்று அழைக்கப்படுகிறார். இவர் ரஷ்யா, உக்ரைன் மீது போர் நடத்தி வருவதற்கு புதினின் பின்னால் இருந்து வேலை செய்துவருவதாக கருதும் உலக நாடுகள் பல அவர் தங்களின் நாடுகளில் நுழையத் தடை விதித்துள்ளன. இந்த நிலையில், டுகின்னின் மகள் டாரியா டுகினா ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, நகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள போல்ஷி வைசியோமி கிராமத்திற்கு அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் டாரியா டுகினா பலியாகியுள்ளார் என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு உக்ரைன் தான் காரணம் கூறப்படுகிறது.