இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த திரைப்படம் வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகிறார்.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ற படங்களில் இணைந்து உருவாக்கிய சகோதரர்களான செல்வராகன், தனுஷ் 11 ஆண்டு கால மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் நானே வருவேன் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், திரைபடத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தனுஷ், பேசாத சைக்கோ வில்லன் போல ஒருவராகவும், அமைதியான குடும்பத்தலைவனாகவும் இடம்பெற்றிருக்கிறார்.
இவை, கமலின், ஆள வந்தான் மற்றும் அஜித்தின் வாலி போல இருப்பதாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், புதிய கதைகளத்தை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும் செல்வராகவன் இந்த திரைப்படத்திலும் ரசிகர்களை ஏமாற்றிவிடமாட்டார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
எது எப்படியோ, திரைப்படம் இந்த மாத இறுதியில் திரையரங்குகளில் திரையிடப்படும்போது பார்த்து தெரிந்துக்கொள்வோம்.