மும்பை மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது, எதிர் திசையில் சென்றுக்கொண்டிருந்த மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தன்னுடைய காரில் இருந்து இறங்கி வந்து தீ விபத்து குறித்து கார் ஓட்டுநரிடம் விசாரித்துள்ளார். பின்னர், ஓட்டுநரிடம் தீப்பற்றி எறியும் காரின் அருகில் செல்ல வேண்டாம் எனவும், தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் பேசியுள்ளார். முதலமைச்சர் தன்னுடைய கான்வாயில் சென்று கொண்டிடுக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தை நேரில் வந்து பார்வையிட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.