ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய பலத்தை அதிகரிக்க, 11 பேர் கொண்ட பிரசாரக் குழுவை கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக அமைத்தது. அதில், அந்த கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் உடல்நலக் காரணங்களைக் கூறி, ஆசாத் புதிய பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார்.