சேலம் மாநகர் நெத்திமேடு அருகே உள்ள குப்தா மெஷின் ரோடு பகுதியில் குறை பிரசவத்தில் பிறந்து ஆணா, பெண்ணா என பாலினம் அடையாளம் காணப்படாத சில மணி நேரங்களே ஆன பச்சிளங் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிச் சென்றுள்ளனர். இன்று காலை வழக்கம் போல குப்பை அள்ள வந்த மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளிகள் குப்பைத்தொட்டியில் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் இருப்பைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தையை வீசிச் சென்ற நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் ஒருபுறம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சுகாதரத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் வீடு வீடாக விசாரணை நடத்தி வருகின்றனர்.