சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அஇஅதிமுகவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகை நேற்று சில அசம்பாவிதங்களுக்கு பின் வருவாய்த் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. இந்த சீலை அகற்றுவது தொடர்பாக இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு, அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவும் அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரித்துள்ளார்
The AIADMK head office case will be heard tomorrow