டெஸ்லா நிறுவனம் மின்சார டிரக்குகளை தயாரிக்க இருப்பதாக 2017ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. அதன்படி, 2019ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என எதிர்ப்பாக்கப்பட்ட இந்த மின்சார டிரக்குகள் பல்வேறு காரணங்களால் செயல் வடிவம் பெறாமல் இருந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெஸ்லா மின்சார டிரக் உற்பத்தியை தொடங்கியது. தற்போது முழுமைப்பெற்று வரும் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார டிரக்குகளின் முதல் மாதிரிகள் பெப்சி நிறுவனத்திடம் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி ஒப்படைக்கப்படும் என எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘செமி’ என்ற பெயரில் மின்சார டிரக்குகளை மின்சார கார்களுக்கு பெயர் பெற்ற டெஸ்லா நிறுவனம் உற்பத்தி செய்துவருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 805 கிலோமீட்டர் ஓடும் இந்த மின்சார டிரக்குகள் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாயாகும்.